பக்கம் எண் :

875

2357.







ஓதி மண்டலத் தோர்முழு
     துய்யவெற் பேறு
சோதி வானவன் றுதிசெய
     மகிழ்ந்தவன் றூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர்
     முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தன
     மல்லலொன் றிலமே.      2
2358.



மறைக ளான்மிக வழிபடு
     மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக்
     காய்ந்தவெங் கடவுள்


அண்ணல்-பெரியோன், சிவன்: அடைந்தது காரணம். அல்லல் இன்மை
காரியம். அல்லல்-பிறவித்துன்பம். பிறப்பில் எய்தும் துன்பம் எனலும்
பொருந்தும். ஒன்று இலம்-ஒன்றும் இல்லேம். சிறிதும் இல்லேம் எனலுமாம்.

     2. பொ-ரை: நிலவுலகில் வாழ்வோர் ஓதிஉய்ய, உதயகிரியில்
ஏறிவரும் கதிரவனால் வழிபடப்பட்ட வானவர் தலைவனாய்
விளங்குவோனும், தன்னைத் துதிப்பாரைக் கண்டு மகிழ்ந்து உடனே
அருள் புரிபவனும், ஆகிய குற்றமற்ற தாமரை மலர்கள் மகளிர்முகம்
போல மலரும் சிறப்பினதாகிய தேவூரில் விளங்கும் முழுமுதற் கடவுளின்
திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும்
இலராயினோம்.

     கு-ரை: மண்தலத்தோர் ஓதி முழுது உய்ய-மண்ணிடத்து வாழும்
மக்கள் திருப்புகழ்களை ஓதிப்பூரணமான உய்வைப்பெற. வெற்பு ஏறு
சோதிவானவன்-உதயகிரியில் ஏறி ஒளிர்கின்ற சூரிய தேவன். துதிசெய-
வழிபட. மகிழ்ந்தவன்-உவந்து அருள்புரிந்த சிவபிரான், தேவூரில், நீரில்,
குற்றம் இல்லாத தாமரைப்பூக்கள் மகளிருடைய முகம் போலப் பூக்கும்
என்பது நீர் நிலவளம் உணர்த்திற்று. தேவூர் ஆதி-தேவூரில் கோயில்
கொண்டெழுந்தருளிய முதல்வன்.

     3. பொ-ரை: வேதவிதிப்படி மிக்க வழிபாடுகளை இயற்றிய
மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்தற்குச் சினந்து வந்த காலனைக்