|
செறுவில்
வாளைகள் சேலவை
பொருவயற்
றேவூர்
அறவன் சேவடி யடைந்தன
மல்லலொன்
றிலமே. 3
|
2359.
|
முத்தன்
சில்பலிக் கூர்தொறு
முறைமுறை
திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன்
றன்னடி
யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி
தவழ்பொழிற்
றேவூர்
அத்தன் சேவடி யடைந்தன
மல்லலொன்
றிலமே. 4
|
காய்ந்த கடவுளும்,
சேற்றில் வாழும் வாளைமீன்களும் சேல்களும்
சண்டையிடுகின்ற வயல்களை உடைய தேவூரில் விளங்கும் அறவனும்
ஆகிய சிவபிரான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால்
நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.
கு-ரை:
மாணி-பிரமசாரி. மார்க்கண்டேயர். கறுவு-கோபம்,
எம்கடவுள், செறுவில்-சேற்றில். பொரு-போர்செய்கின்ற. அறவன்-தருமரூபி.
சிவபிரான், அறவாழியந்தணன் (குறள்).
4. பொ-ரை:
பாசங்களின் இயல்பாகவே விடுபட்டவனும், சிலவாக
இடும் உணவுக்கு ஊர்கள் தோறும் முறையாகப் பலியேற்கும் பித்தனும்,
சிவந்தசடையைக் கொண்டுள்ள பிஞ்ஞகனும், தன் அடியவர்களின்
சித்தத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய மாளிகைகளையும், மதிதவழும்
பொழில்களையும் உடைய தேவூர்ப்பெருமான் திருவடிகளை நாம்
அடைந்துள்ளோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.
கு-ரை:
முத்தன்-அநாதிமுத்தன், இயல்பாகவே பாசங்கள்
இல்லாதவன். எண்குணத்துள் ஒன்று. சடைப்பிஞ்கன்-மயி்ர் முடியினன்.
தன் அடியார்கள் சித்தன்-தன் அடியை வழிபடுவோரது சித்தத்தில்
இருப்பன். சித்தன் -அறிவுக்கறிவாயிருப்பவன் என்றலும் அமையும்.
மதிதவழ்பொழில் சோலையின்உயர்ச்சியைக் குறித்தது.
|