பக்கம் எண் :

877

2360.







பாடு வாரிசை பல்பொருட்
     பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம்
     பற்றறப் பற்றித்
தேடு வார்பொரு ளானவன்
     செறிபொழிற் றேவூர்
ஆடு வானடி யடைந்தன
     மல்லலொன் றிலமே.      5
2361.



பொங்கு பூண்முலைப் புரிகுழல்
     வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை
     வளர்சடை வைத்தான்


     5. பொ-ரை: இசைபாடுபவர்க்கும், பல்பொருள் பயனாக அவன்
இருத்தலை அறிந்துணர்ந்து அன்போடு கூடுவார்க்கும், உலகில்
துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு
அவனையே பற்றித் தேடுவார்க்கும் பொருளாயிருப்பவனும், செறிந்த
பொழில்களை உடைய தேவூரில் நடனம் புரிபவனுமாகிய சிவபிரான்
திருவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.

     கு-ரை: பாடுவாரும் கூடுவாரும் தேடுவாருமான அடியார்கட்குப்
பேறாயுள்ள பொருளானவன் தேவூர்த் திருக்கூத்தன் என்றவாறு. 
இசைபாடுவார் சிவபிரானைத் துணையாக்கொண்டவர்கள், தங்கள் பற்றுக்கள்
எல்லாம் அற்றொழிய அச்சிவபிரானையே பற்றாகப் பற்றித் தேடுவார்கள்.
அவர்களுக்கு அவனன்றி வேறு பொருள் இல்லையாதலின், ‘தேடுவார்
பொருளானவன்’ என்றார். துணையாகக் கொண்ட தமது பற்று அற
எனலுமாம், முன் துணையெனப்பற்றப் பட்டது பின் பொய்யாய்த் தோன்ற,
மெய்த்துணை உயிர்த்துணையாகிய சிவபிரானே எனல் விளங்கும். விளங்கின்
அதையே பற்றுதலும் தேடுதலும் நிகழும். ‘ஆடுவான்’ என்றது எல்லாத்
தலங்களிலும் ஒரு ஞானக்கூத்தனே எழுந்தருளியிருக்கும் உண்மை பற்றியது,
இச் சிந்தாந் தவுண்மை யுணராமல் உரைப்பவை பொருந்தா. (பதி. 152 பா.1).

     6. பொ-ரை: கிளர்ந்து எழுந்த அணிகலன் பூண்டுள்ள
தனங்களையும், நெறிந்த கூந்தலையும், வரிவளையல்களையும் கொண்