பக்கம் எண் :

878

திங்கள் சூடிய தீநிறக்
     கடவுடென் றேவூர்
அங்க ணன்றனை யடைந்தன
     மல்லலொன் றிலமே.       6
2362.







வன்பு யத்தவத் தானவர்
     புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை
     வளைத்தவன் றக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர்
     பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தன
     மல்லலொன் றிலமே.       7

டுள்ள மலைமங்ககை பங்கினனும், கங்கையை வளர்ந்த சடைமீது
வைத்தவனும், திங்கள் சூடியவனும், தீப்போன்ற செந்நிறமுடைய கடவுளும்
ஆகிய, அழகிய தேவூரில் எழுந்தருளிய அழகிய கருணை யாளனை
அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

     கு-ரை: பூண்-ஆபரணம். குழல்-கூந்தல். பொருப்பின் மங்கை-
இமாசலகுமாரி. தீநிறக்கடவுள்-அழல்வண்ணனாகிய சிவபிரான். அங்கணன்-
கருணாகடாக்ஷன். ‘கண்ணுக்கு அழகு கருணை’

     7. பொ-ரை: வலியதோள்களை உடைய அவுணர்தமபுரங்கள்
எரியுமாறு தன்தோள்களால் பெரிய மேருமலையை வில்லாகப் பொருந்த
வளைத்தவனும், தென்தமிழ்க் கலைகளை நன்குணர்ந்தவர் வாழும் தேவூரில்
விளங்கும் அன்பனுமாகிய சிவபிரானின் சேவடிகளை அடைந்தோம்.
ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

     கு-ரை: வல்புயத்த அத் தானவர்-வலிய புஜங்களையுடைய அந்த
அசுரர். அ-பண்டறிசுட்டும் உலகறி சுட்டுமாம். புயத்து அவம்
எனப்பிரித்துரைத்தலும் அமையும்.

     வரை-மேருமலை. தேவூரில் தமிழ்ப்புலவர் இருந்த உண்மை
உணர்த்தப்பட்டது. அன்பன்-‘அன்பேசிவம்’.