2363.
|
தருவு
யர்ந்தவெற் பெடுத்தவத்
தசமுக னெரிந்து
வெருவ வூன்றிய திருவிர
னெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறுநற் றென்றல்வந்
துலவிய தேவூர்
அரவு சூடியை யடைந்தன
மல்லலொன் றிலமே. 8 |
2364.
|
முந்திக்
கண்ணனு நான்முக
னும்மவர் காணா
எந்தை திண்டிற லிருங்களி
றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத
முரறிருந் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தன
மல்லலொன் றிலமே. 9 |
8. பொ-ரை:
சிறப்புடைய மரங்கள் உயர்ந்து வளர்ந்த கயிலை
மலையைப் பெயர்த்தெடுத்த பத்துத் தலைகளை உடைய இராவணன்
நெரிந்து வெருவுமாறு ஊன்றிய கால்விரலை, அவன் பாடல் கேட்டு
நெகிழச்செய்து அவனுக்கு வாள் முதலியவற்றை வழங்கியவனும், தெருக்கள்
தோறும் நல்ல தென்றல் வந்துலவும் தேவூரில் பாம்பணிந்தவனாய்
விளங்குவோனுமாகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால்
அல்லல்கள் இலரானோம்.
கு-ரை:
தசமுகன்-இராவணன, தேவூர்த்தெருக்களின் நலம்
கூறப்பட்டது. சூடி-அணிந்த சிவன்.
9. பொ-ரை:
திருமால் பிரமர்கள் அடிமுடிகாண்போம் என
முற்பட்டுத் தேடிக் காணாது தொழுத எந்தையும், திண்ணிய வலிமை
பொருந்திய பெரிய யானையை உரித்த எம்பெருமானும், செந்து என்னும்
இசைவகையை இசைத்து வண்டுகள் முரலும் தேவூரில் விளங்கும்
அந்திவண்ணனும் ஆகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால்
அல்லல்கள் இலரானோம்.
கு-ரை:
களிற்றிற்குத் திண்மையும் திறலும் இருமையும்
|