|
எல்லை
யில்புகழ் மல்கிய
வெழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய
பத்தும்வல் லாரே. 11 |
திருச்சிற்றம்பலம்
போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள்
பத்தையும் ஓதவல்லவர் துன்பங்கள்
இன்றி விண்ணுலகை ஆள்வர்.
கு-ரை:
அல்லல் இன்றி விண்ணாள்வர்கள் வல்லார் என்க.
முற்பாக்களில் யாம் அல்லல் ஒன்று இலம் என்றருளி, இதில், இப்பத்தும்
வல்லார் அல்லல் இலராவர் என்ற உண்மை உணர்த்தப் பட்டது.
இத் திருப்பதிகத்தை நாடோறும் நியமமாகப் பாராயணம் செய்பவர் அல்லல்
அடையார் என்பது திண்ணம். அதிபன்-தலைவன்.
திருஞானசம்பந்தர்
புராணம்
நம்பர்மகிழ்
திருவாரூர் வணங்கிப் போந்து
நலங்கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
திருமலிவெண்டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.
-சேக்கிழார்.
|
|