பக்கம் எண் :

883

2368.







விடையுடை யப்பனொப்பி னடமாட வல்ல
     விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
     தகவைத்த சோதி பதிதான்
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து
     கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
     வளர்கின்ற கொச்சை வயமே.              2
2369.



படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
     களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன்
     இடமாய வேர்கொள் பதிதான்


     2. பொ-ரை: விடையை ஊர்தியாகக் கொண்ட தந்தையும், ஒப்பற்ற
நடனங்கள் புரிபவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட விமலனும்,
சடையில் வெள் எருக்கமலர் கங்கை திங்கள் ஆகியவற்றைப் பொருந்தச்
சூடிய ஒளிவடிவினனும் ஆகிய சிவபிரானது பதி, மடைகளில்
அன்னப்பறவைகள் நிறைந்து பரவித் தாமரைமலர்கள் மேல் தங்கும்
வயல்கள் சூழ்ந்ததும், கொடை வள்ளல்களாய் மறையவர்கள் வாழ்வதுமாகிய
கொச்சை வயமாகும்.

     கு-ரை: ஒப்பு இல் நடம்-உவமை இல்லாத ஞானத்திருக்கூத்து.
விகிர்தம்-மாறுபாடு (பா.10). சடையிடை, வெள்ளெருக்க மலர்-
‘வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பு’ (கம்பர், யுத்தகாண், இராவணன்
வதைப், 237). தக-தகுமாறு, பொருந்த. சோதிபதி- ஆறன்றொகை,
அன்னம்பரந்து கமலத்து வைகும் வயல். கொடையுடை வண்கையாளர்-
‘கொடையில் ஓவார் குலமும் உயர்ந்தம் மறையோர்கள்’ (தி.2 ப.122 பா.1).
‘உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒரு நாளும் கரவாவண்கைக்
கற்றவர் சேரும் கலிக்காழி, (தி.1 ப.102 பா.1).

     3. பொ-ரை: படம் பொருந்திய பாம்பு ஆடும் முன்கையை
உடையவனும், துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும், அகன்ற
வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலிகொள்ளும் இன்பனும்
ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம்,