|
நடமிட
மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு
நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
மறையோது கொச்சை வயமே. 3 |
2370.
|
எண்டிசை
பாலரெங்கு மிகலிப் புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி
வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
வளர்கின்ற கொச்சை வயமே. 4 |
மயில்கள் நடனமாட
வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள்
சூழ்ந்ததும், பொற்கலசம் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப்பறவைகள்
வேதங்களை ஓதுவதுமாகிய கொச்சை வயமாகும்.
கு-ரை:
மஞ்சை-மயில் மயில் ஆட வண்டு பாடும். நளிர்-குளிர்ச்சி.
கூடத்தின் மிசைக் குடம் இடுதல் முன்பே இருந்தது. பூவை-நாகணவாய்ப்புள்,
கூடம் ஏறி மறை ஓதும் கொச்சை வயம் என்க.
4. பொ-ரை:
எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலானோர்
எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு விளக்குகளை வரிசையாக
ஏற்றித்தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவபிரானது பதி,
செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில்
பாய வாளை மீன்கள் கூடி ஆழமான இடங்களில் பாய்ந்து விளையாடும்
ஓசை, படைகள்வரும் ஓசைபோல வளர்கின்ற கொச்சைவயமாகும்.
கு-ரை:
பாலர்-பாலகர். இகலி-பகைத்து. வழிபடு முறையுட் சிறிது
உணர்த்திற்று. ஒளி தீபமாலை-தீபாவளி. பாதர்-திருவடியுடையவர்.
குண்டு-ஆழம்.
|