பக்கம் எண் :

885

2371.







பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
     னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன வல்லவற்றை யினிதாக நல்கும்
     இறைவன் னிடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
     வளர் தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடு முயர்வான் மறைத்து
     நிறைகின்ற கொச்சை வயமே.       5
2372.







புலியதள் கோவணங்க ளுடையாடை யாக
     வுடையா னினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்க ளெரிசெய்த நாத
     னலமா விருந்த நகர்தான்
கலிகெட வந்தணாளர் கலைமேவு சிந்தை
     யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்க ளுயர்மாட நீடு
     வரைமேவு கொச்சை வயமே.       6


     5. பொ-ரை: பனிபடர்ந்த மலைக்கு மன்னாகிய இமவானின்
மருமகனும், குபேரனோடு தோழமை கொண்ட பகவனும், இனியன
அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன்
இடமாகக் கொண்டருளும் தலம், முனிவர் குழாங்களோடு அந்தணர்கள்
வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி வளைந்த பிறையையும் வானையும்
மறைத்து நிறையும் கொச்சை வயமாகும்.

     கு-ரை: பனி.........மலைக்கு-இமாசலராசனுக்கு. குபேரன் சிவபிரானுக்குத்
தோழனாதல் பிரசித்தம். இனிக்காதவற்றையும் இனியவாசகச் செய்தருளும்
பெருமான். பிறப்பு இன்னாதது என்பது சர்வமத சம்மதம். அதனை
இனியதாகப் பலவுயிரும் விரும்புகின்றன. அவ்விருப்பம் மீண்டும் பிறப்பதற்கு
உரிய வினையாகின்றது. இது திருவருட்செயல், அணவி-கிட்டி. ‘வேள்விப்
புகையால் வானம் இருள் கூர் வெண்காடே’ (பதி.197 பா.7).

     6. பொ-ரை: புலித்தோலையும் கோவணத்தையும், தான் பெற்றுடைய
ஆடையாகக் கொண்டவனும், நினைக்கும் ஒருநொடிப்