|
*
* * * * * * * * 7
|
2373.
|
மழைமுகில்
போலுமேனி யடல்வா ளரக்கன்
முடியோடு தோள்க ணெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் னடிவைத்த பேயொ
டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குன்மாத ரிசைபாடி யாட
விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார் கடங்க
ளடிதேடு கொச்சை வயமே. 8 |
பொழுதில் உலகை நலிவு
செய்து வந்த முப்புரங்களை எரிசெய்தழித்த
நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம், கலிகெட வேள்வி
செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து
வாழ்வதும் அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் நீண்ட மலைகள்
போலத் தோன்றுவதுமாய கொச்சைவயமாகும்.
கு-ரை:
அதள்-தோல் உடையாடை (பதி.217 பா.2) கலி-வறுமை.
அந்தணாளர்-அழகும் தண்மையும் ஆள்பவர். கலை-வேத முதலிய கலைகள்.
7. * *
* * * * * *
8. பொ-ரை:
மழைமுகில் போன்ற கரிய மேனியையும் வலிய
வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு
தோள்களும் நெரியவும், அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர்போன்ற
திருவடியைச் சிறிதே ஊன்றியவனும், பேய்களோடு உடனாடி மகிழ்பவனும்
ஆய சிவபிரான் எழுந்தருளியபதி, மேகலையணிந்த அல்குலை உடைய
மகளிர் இசைபாடி ஆட, வானளாவ உயர்ந்த கமுக மரத்தழைகள் விண்ணில்
செல்வார் அடிகளை வருடுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும்.
கு-ரை:
மழை முகில்-மழையைப் பொழியும் மேகம். அரக்கன்-
இராவணன், இராவ ணன் என்றவாறுபிழை-மதியாது மலை யெடுத்த குற்றம்.
இழை-மேகலை முதலியன. கண்ணி-வலை., புட்களைப் படுக்கும்
முடிப்புக்கயிறுமாம். கமுகின் குழை (-தளிர்) தருகண்ணி, விண்ணில்
வருவோர் காலைச்சிக்கச் செய்யும் என்றதால், அதன் உயர்ச்சிகூறிற்று.
|