பக்கம் எண் :

887

2374.







வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய
     முழுதுண்ட மாலு மிகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்து
     மறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
     விரைதேர போது மதுவிற்
புண் ரி கங்களோடு குமுதம் மலர்ந்து
     வயன்மேவு கொச்சை வயமே.       9
2375.







கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்ட
     ரிடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
     விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க
     குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து
     மணநாறு கொச்சை வயமே.         10


     9. பொ-ரை: வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்மேல் எழுந்தருளிய
பிரமனும், உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடி
முடிகளைக் காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தைக் கிளறியும்
பிரமன் அன்னமாய்ப் பறந்து சென்றும் அறிய முடியாதவாறு சோதிவடிவாய்
நின்ற சிவபிரானது பதி, நண்டு உண்ணவும் நாரைகள் செந்நெல் நடுவே
இருந்து இரைதேட, நிரம்பிய தேனுடன் தாமரை மலரோடு குவளை மலர்கள்
வயலிடையே மலரும் கொச்சைவயமாகும்.

     கு-ரை: வளர்வான்-பிரமன். மால் கிளறி, வளர்வான் பறந்தும், நண்டு
உண்ண, நாரை இரையைத் தேர (-ஆராய). புண்டரிகம்-தாமரை. குமுதம்-
ஆம்பல்.

     10. பொ-ரை: கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று உதிரும்
அழுக்கினரும், குண்டர்களும், சீவர உடையினராகிய ஆகிய சமணரும்,
புத்தரும் மெய்யுரையாதவாறு செய்து விளையாடவல்ல வேறுபட்ட பல்வகை
உருக்கொண்டருளும் பரமனாகிய