2376.
|
இறைவனை
ஒப்பிலாத வொளிமேனி யானை
யுலகங்க
ளேழு முடனே
மறைதரு வெள்ளமேவி வளர்கோயின் மன்னி
யினிதா
விருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை
பாடுமவர் போய்
அறைகழ லீசனாளு நகர்மேவி யென்றும்
அழகா
விருப்ப தறிவே. 11
|
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
சிவபிரானது பதி, படப் பாம்பின் எயிறு போன்று குரவம்
மலர, வயல்களில் நீல மலர்கள் அலர, இவற்றால் மணம் சிறந்து விளங்கும்
கொச்சைவயமாகும்.
கு-ரை:
மாசர்-அழுக்கர். புறப்புறச்சமயத்தார்க்குச் சமயாதீதனான
பரறு சிவத்தின் மெய் புலப்படாமை கூறிற்று. எயி-பல். பயின்று-மிகுதியாய்
செய்-கழனி. (மொட்டு-அரும்பு கமழ்ந்து பரந்து. வியலிடம் கமழ் (பு நா. 50).
11. பொ-ரை:
எங்கும் நிறைந்தவனை, ஒப்பில்லாத ஒளி மயமான
திருமேனியனை, ஏழுலகங்களையும் மறைக்குமாறு ஊழி வெள்ளம்
பரவியகாலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணி மலைக்
கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தைக் குறைவற்ற
ஞானம்பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப்பரவிய தமிழ் மாலைப்
பத்தையும் பாடிப் போற்றுபவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன்
ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞான வடிவினராய்
வீற்றிருப்பர்.
கு-ரை:
ஒப்பு இலாத ஒளி மேனியான்-உவமையில்லாத
விரகாசத்தையுடைய திருமேனியை உடையவன். அங்கு இங்கு என்னாதபடி
எங்கும் பிரகாசமாய் (தாயுமானவர்-1) விளங்குவது வேறொன்றில்லாமையால்
ஒப்பின்மை தெளிவாம். மறைக்கும் வெள்ளம் ஊழிப்பிரளயம்.
|