பக்கம் எண் :

889

84. திருநனிபள்ளி

பதிக வரலாறு:

     திருஞானசம்பந்தர் திருவருள்பெற்றுச் சீகாழியில் எழுந்தருளியுள்ள
உண்மையைக் கேட்டறிந்தனர். உலகோர் பலர் ‘தாவில் சராசரங்களெல்லாம்
சிவம் பெருக்கும் பிள்ளையாரை’ மணிவயிற்றில் உலகுய்ய வைத்து வழங்கிய
பகவதியார் திருஅவதாரம் செய்த தலமாகிய திருநனிபள்ளியின் மறையவரும்
அதைக் கேட்டுணர்ந்தனர். அதன்பின் சீகாழியை அடைந்தனர். ஆளுடை
பிள்ளையார் அடிமலர் வணங்கினர். தாம் வாழும் திருப்பதிக்கு
எழுந்தருளும்படி வேண்டினர். நாயனாரும் அதற்கு இசைந்து புறப்பட்டுத்
திருநனிபள்ளியை அணுகினார். எதிரே தோன்றும் இத்திருப்பதி யாது? என்று
வினாவினார். அவரை யருளிய சிவபாதவிருதயர் அதுதான் திருநனிபள்ளி
என்றனர். அதுகேட்ட ஞானப்பிள்ளையார் இத்திருப்பதிகத்தைப் பாடி,
அத்தலத்தை அடைந்து திருக்கோவிலினுட்புகுந்து வழிபட்டார்,
இத்திருப்பதிகமே பாலையாயிருந்த அத்திரு நனிபள்ளியை நெய்தலாக்கிற்று
என்பர் பெரியோர். “ஒண்கெழுவு ஞாலத்தினரறிய மன்னு நனிபள்ளியது,
பாலைதனை நெய்தலாக்கியும்” என நம்பியாண்டார் நம்பிகள் அருளிய
திருஉலா மாலையிலும் “ஓடஞ் சிவிகை உலவாக்கிழியடைக்கப,் பாடல்
பனைதாளம் பாலை நெய்தல்” எனத் திருக்களிற்றுப்படியாரிலும் (70)
உள்ளமை அறிக.

பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 220                              பதிக எண்: 84

திருச்சிற்றம்பலம்

2377.



காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை
     படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுட கா டமர்ந்த
     சிவன்மேய சோலை நகர்தான்



     1. பொ-ரை: நமர்காள்! காரை, கூகை, முல்லை, களவாகை, ஈகை,
படர்ந்த தொடரி, கள்ளி ஆகிய தாவரங்கள் அழகுச் செய்யச்