|
தேரைக
ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும்
நனிபள்ளி போலும் நமர்காள். 1 |
2378.
|
சடையிடைப்
புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம்
வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடைவைத்ததொக்கு மலர்தொத்து மாலை
யிறைவன் னிடங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து
மணநாறு நீலம் மலரும்
நடையுடை யன்னம்வைகு புனலம் படப்பை
நனிபள்ளி போலும் நமர்காள் 2 |
சூரை செறிந்த சுடுகாட்டை
விரும்பும் சிவபிரான் எழுந்தருளிய, சோலைகள்
சூழ்ந்த நகர், தேரைகள் ஆரைக்கொடிகளை மிதித்துத்துள்ள, அதனைக்
கண்ட வாளைமீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள,
நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில்
எருமைகள் படிந்து மகிழும் நனிபள்ளியாகும்.
கு-ரை:
காரைமுதலிய தாவரங்கள் சுடுகாட்டில் மிக்குள்ளன.
முட்காற்காரை புறம்258. கள-களா. கருவையிலும் சிங்கையிலும்
களவாண்டான் (தனிப்பாடல்) ஈகை-இண்டஞ்செடி, ஈங்கை-புலி தொடக்கி
எனலுமுண்டு. இண்டுபடர்ந்த இருள்சூழ்மயானத்து தொடரி-முட்செடி.
கடுவும் தான்றியும் கொடுமுள் தொடரியும் சூரை- கான்றையும் சூரையும்
கள்ளியும் அடர்ந்து மணிமேகலை 6- 81. பம்மி-செறிந்து. குளத்தினில்
ஆரைபடர்ந்து திருமந்திரம்.2911. மகளிர் வள்ளை கொய்யும் பதிற்.29-2.
2. பொ-ரை:
சடையிடைப்புக்கு ஒடுங்கியுள்ளதாய்த் தங்கிய
கங்கையையும், வளரும் பிறையாகிய கண்ணியையும், இடையிடையே விரவிய
கொத்தாகிய மாலையையும் உடைய இறைவன் இடங்கொண்டருளும் பதி,
மடையிடையே வாளைமீன்கள் துள்ள, முகிழ்த்துள்ள வாய் விரிந்து மணம்
வீசும் குவளைமலர்களுடையன வாய் நடையில் சிறந்த அன்னங்கள் வாழும்
நீர்நிலைகளை உடைய தோட்டங்கள் சூழ்ந்த நனிபள்ளியாகும்.
|