பக்கம் எண் :

891

2379.







பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
     ஒழிபா டிலாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
     யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
     விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு
     நனிபள்ளி போலும் நமர்காள்.         3
2380.



குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
     தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி யுமைபாக மாக
     வுடையா னுகந்த நகர்தான்


     கு-ரை: உள்ள + தங்கு + வெள்ளம் எனப் பிரிக்கபடப்பை-
தோட்டம் பக்கம் எனலுமாம். அன்னத்தின் நடை உவமிக்குஞ் சிறப்புடையது
ஆதலின், நடையுடை யன்னம் எனப்பட்டது.

     3. பொ-ரை: அடியவர்கள் தங்களுக்குக் கிடைத்த மலர்களைக்
கொண்டு வழிபட அதனை ஒழியாது ஏற்றருளும் தலைவனும்,
கருங்குவளைமலர் போலத் தனது கண்டம் நிறம் உறுமாறு விடத்தை
உண்ட காளையும் ஆகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், வண்டுகள்
தங்கித் தேன் உண்டு விட்ட வெறுமலர்களோடு கூடி விசைத்து எழும்
கொம்புகளில் விரியும் பருவத்துள்ள மணம் பொருந்திய மலர்களின் தேன்
உண்டு அகஇதழ்களில் வண்டுகள் உறங்கும் பொழில்களை உடைய
நனிபள்ளியாகும்.

     கு-ரை: தேனை விரும்பிய வண்டுகள் முன்னரே பூத்து மணம்
நீங்கிய வறும்பூக்களைத் தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து எழுந்து விட்டதால்
ஓங்கி எழுந்து விசையுடன் சென்ற மலர்க்கொம்புகளில், அவ்வண்டுகள்
தொடாது விட்ட போதுகள்பூத்தமையால் மணம் பரவிற்று. பரவிய
அம்மணத்தால், பூத்த மலர்களின் அகவிதழ்களைப் பொருந்தி வண்டுகள்
ஒலி அடங்கித் தேனுண்டு உறங்கின, இவ்வியற்கையை ஆசிரியர் அருளிய
திறத்தை உணர்ந்து மகிழ்க.

     4. பொ-ரை: குளிர்ந்த கங்கை தங்கிய சடையின்கண் விளங்கிய
தலைமாலையோடு கூடி, ஒளிதரும் திங்களைச் சூடி, உமையம்மையை