பக்கம் எண் :

892

குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
     பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு
     நனிபள்ளி போலும் நமர்காள்.       4
2381.







தோடொரு காதனாகி யொருகா திலங்கு
     சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை
     யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
     வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுட னாடுசெம்மை யொலிவெள்ள மாரு
     நனிபள்ளி போலும் நமர்காள்.       5


ஒருபாகமாக உடைய பெருமான் உகந்து எழுந்தருளிய நகர், குளிர்ந்த,
கொம்பு என்னும் இசைக்கருவியின் பாடல்களோடு குயில் கூவும்
இசையையும் கேட்ட பெடை வண்டு தானும் முரல நண்ணிய சோலைகளில்
வரிசையாக நாரைகளும் குருகுகளும் வைகும் நனிபள்ளியாகும்.

     கு-ரை: மாலையோடு குலவிப் பிரகாசிக்கும் பிறை சூடி, கொம்பில்
என்றே மதுரைத் திருஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பில் உள்ளது. சுவாமிநாத
பண்டிதரும் வேறு சிலரும் பதித்தவற்றுள், கொம்மல் என்றுள்ளது. அது
கெதாநு கெதிகநயம் பற்றியதொரு பிழையாகும். குளிர்ச்சியைத்தரும்
கும்மிப்பாடலொடு குயிலின் பாடலைக்கேட்ட வண்டு என்று கூறுவதினும்
கொம்பு என்னும் இசைக்கருவியின் ஒலியொடு குயிலின் பாடலைக் கேட்ட
வண்டு எனக்கூறுவது சிறந்தது.

     5. பொ-ரை: ஒருகாதில் தோடணிந்தவனாய், ஒருகாதில் வளைந்த
சங்கைக் குழைதாழ நின்று புரளுமாறு அணிந்தவனாய்ச் சுடுகாட்டைத் தனது
இருப்பிடமாகக் கொண்டு அனலிடை ஆடும் எந்தையாகிய சிவபிரானது பதி,
வீடு அடைய விரும்பும் அடியவர்கள் விதிமுறையிது என்று தெரிந்து நீராடி
மணம் பொருந்திய நீரை விரலால் தெளித்து அர்க்கியம்தர, ஒலியோடு
பெருவெள்ளமாய்ப் பெருகி நாடுமுழுதும் பரவி வரும் காவிரியின் கரையில்
விளங்கும் நனிபள்ளியாகும்.