பக்கம் எண் :

895

2385.







நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
     தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுறு வேதநாவன் அயனோடுமாலு
     மறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
     புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாச நாறும்
     நனிபள்ளி போலும் நமர்காள்.         9
2386.



அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்
     இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர்
     குணமின்றி நின்ற வடிவும்


     கு-ரை: வாளன்-சிவபிரான் அருளிய வாளை உடையவன்.
(இராவணன்). வாளன் வேலன் இரண்டும் சிவபிரானைக் குறித்தவை
எனலும் ஆம். உலம்-கற்றூண், திரண்டகல் ஆதும்-யாதும். ‘ஆதும்
சுவடுபடாமல்ஐயாறடைகின்போது’ (தி.4 ப.3 பா.1) இதில், பிறபத்தும்
நோக்காதார் ‘யாதும்’ என்று எழுதிவிட்டனர். ‘சென்று ஆதுவேண்டிற்று
ஒன்று ஈவான்’ (தி.6 ப.20 பா.9).

     9. பொ-ரை: நிறம் பொருந்தியதொரு எரிவடிவம் தோன்றித்
தங்களிடையே நிற்க அதன் நீர்மை சீர்மை ஆகியவற்றை நினையாதவராய்
அறம்பொருந்திய வேதங்களை ஓதும் நாவினனாகிய பிரமனும் திருமாலும்
முடி அடிகளைத் தேடமுயன்று அறியாதவராய் நின்ற தலைவனது நகர்,
முல்லை நிலத்தில் விரிந்த முல்லை, மல்லிகை, அசோகு, புன்னை,
கொன்றை ஆகியன செறிந்த சோலைகளில் புத்த மலர்களில் புதுமணம்
கமழும் நனிபள்ளியாகும்.

     கு-ரை: முதலீரடியில் அரியும் அயனும் அடிமுடி தேடிய வரலாறு குறிக்கப்பட்டது. பின்னீரடியில் முல்லை மமௌவல்முதலியவற்றின் மணம் வீசும். சிறப்பு நனிபள்ளிக்கு உண்டென்பது கூறப்பட்டது. புற-புறவம். ‘குறியதன்கீழாக்குறுகல்’ (நன்னூல்).

     10. பொ-ரை: அன்னமாக, வயிற்றுக்குட் செல்லும் சோறு கொணர்க
எனக் கேட்டுக் கையில் இட உண்டு திரியும் அமணரும், மனம் விரும்பிக்
கஞ்சியைப் பனைமட்டையாலியன்ற மண்டையில்