|
வினைமிகு
வேதநான்கும் விரிவித்த நாவின்
விடையான்
உகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யு
நனிபள்ளி
போலும் நமர்காள். 10
|
2387.
|
கடல்வரை
யோதமல்கு கழிகானல் பானல்
கமழ்காழி
யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
பதியான
ஞான முனிவன்
இடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின்
இசையா
லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
வினை
கெடுதலாணை நமதே. 11 |
திருச்சிற்றம்பலம்
ஏற்றுண்டு தொண்டர்க்குரிய
குணமின்றி நிற்கும் புத்தரும் கூறுவனவற்றைக்
கொள்ளாது கிரியைகள் மிகுந்த வேதங்கள் நான்கையும் ஓதிய நாவினை
உடைய விடையூர்தியான் விரும்பிய நகர், தெளிந்த ஞானமுடைய
தொண்டர்கள் நாள்தோறும் திருவடிகளைப் பரவிப் போற்றும்
நனிபள்ளியாகும்.
கு-ரை:
செல்கு-செல்லும். செல்குசோறு- வினைத்தொகை கொணர்க-
கொண்டுவருக. மண்டை-பனைமட்டையாலான உண்கலம். சிவபிரான்
வேதங்களை அருளியவன் என்பது இங்கும் உணர்த்தப்பட்டது. நன-நனவு.
தெளிவு.
11.
பொ-ரை: கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க
கழிகளையும்
சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று
கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த்
தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு
உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும்
எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும்.
கு-ரை:
ஆறும் நாலும்-ஆறங்கங்களும் நால்வேதங்களும். (தி.2 தி.6
பா.3.) அத்தர்பியல்மேல் இருந்து-தந்தையார் திருத்தோள்மிசை அமர்ந்து.
ஆணைநமதே;- (தி.2 ப.85 பா.11, தி.3 ப.78 பா.,11, தி.3 ப.118 பா.11)
|