பதிக
வரலாறு:
மங்கையர்க்கரசியாரும்
குலச்சிறையாரும் திருமறைக் காட்டில்
பாலறாவாயர் எழுந்தருளியிருப்பதை அறிந்து விடுத்த ஏவலர் போற்றிச்
செய்துகொண்ட விண்ணப்பத்திற்கு அவர் இசைந்தார். புகலிமன்னர்,
மொழிமன்னர்க்குத், தென்னாடுற்ற செயலையும் அதைப் பாண்டிமா
தேவியாரும் அமைச்சரும் உரைத்துவிட்ட வார்த்தையையும்
புகன்றருளிக்கன்னி நாட்டிற்கு எழுந்தருளத் துணிந்தார். அப்பொழுது
நாவரசப் பெருந்தகையார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு
ஓர் அவதி்(எல்லை) இல்லை. உரை செய்வது உளது. உறுகோள் தாமும்
தீய. எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்றருளினார். அது கேட்ட
புகலிவேந்தர், பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால், பழுது
அணையாது எனப் பகர்ந்து பரமர் தாள்போற்றி வேயுறு தோளியை
விளம்பியது இத்திருப்பதிகம்.
பண்:
பியந்தைக்காந்தாரம்
ப.தொ.எண்: 221
பதிக எண்: 85
திருச்சிற்றம்பலம்
2388.
|
வேயுறு
தோளிபங்கன் விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 1 |
1.
பொ-ரை: மூங்கில்போன்ற தோளினை உடைய உமையம்மையை
ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான்
திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுற்ற
நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள
காரணத்தால் ஞாயிறு, திங்கள் முதலான
|