2389.
|
என்பொடு
கொம்பொடாமை யினவமார் பிலங்க
எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 2 |
ஒன்பான் கோள்களும்
குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை
அடியார்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
கு-ரை:
வேய் உறுதோளிபங்கன்-மூங்கிலின் இரு கணுக்களுக்கும்
இடைப்பட்ட பகுதியைப்போலும் தோள்களையுடைய உமாதேவியாரை
இடப்பால் உடையவர். ஞாயிறு . . . பாம்பு இரண்டும்-சூரியன் முதலிய
ஒன்பதுகோள் (கிரகங்)களும் ஆசு அறு நல்ல நல்ல-குற்றம் அற்ற
நலத்தைச் செய்வன. அவை அடியார்களுக்கு மிக நல்லன நல்லன. பாம்பு
இரண்டும்- இராகுவும் கேதுவும்.
2. பொ-ரை:
என்பு, பன்றிக்கொம்பு, ஆமையோடு ஆகியன
மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய
ஊமத்தைமலர்மாலை, கங்கை ஆகியவற்றை முடிமேல் சூடி
உமையம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து
எழுந்தருளியிருத்தலால், அசுவினி முதலாக உள்ள நாள்களில்
ஆகாதனவாகிய ஒன்பது, பத்து, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய
எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு
மிக நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.
கு-ரை:
கொம்பு-பன்றிக்கொம்பு. ஆமை-முற்றலாமையோடு. ஏழை-
உமாதேவியார். ஏழை பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய் ஒன்பது-
அசுவினி முதலாகக்கொண்டு எண்ணின் ஒன்பதாவது நட்சத்திரம்
ஆயிலியம். ஒன்பதோடொன்று- பத-மகம். ஒன்பதொடேழு - பதினாறு-
விசாகம். பதினெட்டு. கேட்டை. ஆறு- திரூவாதிரை, உடனாய நாள்கள்
மற்றயவை. அவை- பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, சுவாதி, பூராடம்,
பூரட்டாதி, நாள்கள் என்றதால், ஆகாத திதிகளும் கிழமைகளும் அடங்கின.
இவ்வுண்மையை
|