பக்கம் எண் :

901

வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
     மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல
     அடியா ரவர்க்கு மிகவே.           5
2393.







வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர்
     மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
     உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்
     கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல
     அடியா ரவர்க்கு மிகவே.           6



செறிந்தவன்னிஇலை, கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து
என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர், இடி,
மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி
நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும்.

     கு-ரை: துஞ்சிருள்வன்னி:- வன்னிமரத்தின் இலைகள் மிகுந்தும்
அடர்ந்தும் தழைத்திருத்தலால் இருள் துஞ்சும் நிலையினது. உளத்திற்கு
ஏற்றினும் அமையும்.

     6. பொ-ரை: ஒளியும் வரியும் பொருந்திய புலித்தேலாடையை
உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார்
உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள், வன்னி,
கொன்றை, கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின்
கண் புகுந்துள்ள காரணத்தால் வலியகுரங்கு, புலி., கொலையானை, பன்றி,
கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும்!
அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும்.

     கு-ரை: வரி-கீற்றுக்களை உடைய புலியினது. வாள்வரி:-
அன்மொழித்தொகை. கோள்-வலிமை. அரி-குரங்கு. கோளு (வலிமை,
கொலையு)ம் அரி(-பகை)யும் உடைய உழுவை (-புலி) எனலுமாம்.
ஆளரி-சிங்கம். ‘ஆளரியேறனையான்’ (பெரிய. திருஞான. 474).