2394.
|
செப்பிள
முலைநன்மங்கை யொருபாக மாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 7 |
|
|
2395.
|
வேள்பட
விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடு உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 8
|
7. பொ-ரை: செப்புப் போன்ற இள நகில்களை
உடைய
உமைநங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய
சிவபிரான் தன்னை அடைந்த இளமதியையும், கங்கையையும் முடிமேல்
அணிந்தவனாய், என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத்தால்,
வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும்
துன்பங்கள் நம்மை வந்து நலியா. அடியார்களுக்கும் அவை நல்லனவே
செய்யும்.
கு-ரை:
செப்பு-சிமிழ். அடைவு ஆர்-அடைதலுற்ற. அப்பு-கங்கை.
வெப்பு-வெம்மை. சுரநோய் சிலேத்துமம்.
வாதம்-வளி.
பித்து-பித்தம். மிகினும் குறையினும் நோய்செய்யும்
நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று (குறள். 941)
8. பொ-ரை:
மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து
விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து, முடிமிசை
|