பக்கம் எண் :

903

2396.







பலபல வேடமாகும் பரனாரி பாகன்
     பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென்
     உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர்
     வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல
     அடியா ரவர்க்கு மிகவே.           9


ஒளிபொருந்திய பிறை, வன்னி, கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச்
சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ்கடல்களால்
சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிறராலும் வரும் இடர்கள்
நம்மை வந்து நலியா; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும்.
அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும்.

     கு-ரை: விழிசெய்து-நெற்றிவிழி திறந்து எரித்து. வாள்-ஒளி.
அரையன்-அரசன், இராவணன். இடர் ஆன-துன்பமானவை. கடல்நல்ல.

    9. பொ-ரை: பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும்,
உமைபாகனும், எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான், முடிமீது
கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள
காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால், வேதங்கள்
தேவர்கள் ஆகியோராலும், கெட்ட காலங்கள், அலைகடல், மேரு
ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே
அமையும். அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும்.

     கு-ரை: ‘வேடம் பலவாகி நின்ற பரமன்’ (தி.2 ப.87 பா.6.)
ஒருவனுமே பலவாகி நின்றதொரு வண்ணமே’ (தி.3 ப.10. பா.8)
ஒன்றொடொன்று ஒவ்வாவே’ (தி.3 ப.102 பா.6.) ‘ஒன்றோடொன்றொவ்வா
வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நின்றனன்’ (சித்தியார்-71.)

     நாரி-உமாதேவியார். மலர்மிசையோன்-செந்தாமரை மேலிருக்கும்
பிரமன். காலம்ஆன-கெட்டகாலங்களானவை.