2397.
|
கொத்தலர்
குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென்
உளமே புகுந்த
அதனால்
புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல்
திருநீறு செம்மை
திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு
மிகவே.
10 |
2398.
|
தேனமர்
பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன்
எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான
முனிவன் |
10. பொ-ரை:
பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய
உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு
அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை
மலர், பிறை, பாம்பு ஆகியவற்றை அணிந்து, என் உளம் புகுந்துள்ள
காரணத்தால், புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு
வாதில் தோற்றோடச் செய்யும். நமக்கு வரும் அத்தகைய தீமைகள்
நல்லனவற்றையே செய்யும். அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே
செய்யும்.
கு-ரை: விசையற்கு-அர்ச்சுனுக்கு, வேடவிகிர்தன்வேடனாக
மாறியவன். வாதில்-மதுரையில் நடந்த அனற்போர் புனற் போர்களிலும்
போதிமங்கைக்கருகில் புத்தருடன் நடந்த போரிலும்.
11. பொ-ரை: தேன் பொருந்திய பொழில்களைக்
கொண்டதும்,
கரும்பு, விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும், வளரும்
செம்பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும், நான்முகனால் முதன்முதல்
படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான
முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும்
கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய
சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள்
வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.
|