|
தானுறு கோளுநாளும்
அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே. 11
திருச்சிற்றம்பலம்
|
கு-ரை:
மறைஞான ஞானமுனிவன்-அபரஞானமும் பரஞானமும்
ஆகிய இரண்டையும் உடைய முனிவர். பெரிய, திருஞழன. சிவனடியே
சிந்திக்கும் சிவஞானம் (ஆகிய) உணர்வரிய விஞ்ஞானம்
பவம்........அறமாற்றும்........ஓங்கிய ஞானம் (ஆகிய) உவமையிலாக்
கலைஞானம் தவமுதல்வர் சம்பந்தர்....... உணர்ந்தார். கோளும்-சூரியன்
முதலிய கிரகங்களும். நாளும்-அசுவினி முதலிய நட்சத்திரங்களும்.
திருஞானசம்பந்தர்
புராணம்
அரசருளிச்
செய்கின்றார் பிள்ளாய்! அந்த
அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதி யில்லை; உரைசெய்வ துளதுறுகோள் தானுந்
தீய
எழுந்தருள உடன்படுவ தொண்ணா தென்னப்
பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால்
பழுதணையா தெனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தர்
வேயுறு தோளியையெடுத்து விளம்பி னாரே.
-சேக்கிழார்.
|
|