2400.
|
ஊனடை
கின்றகுற்ற முதலாகி யுற்ற
பிணிநோ யொருங்கு முயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு
விடையா னிலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
திருநாரை யூர்கை தொழவே. 2 |
|
|
2401.
|
ஊரிடை
நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
றுயருற்ற
தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
யொழிவுற்ற
வண்ண மகலும் |
வரையினிலாமை-அளவில்லாமை,
அளவில் நில்லாமை. (மை) எதிர்
மறைவினையெச்சமும் பெயரும் ஆம். கைதொழுதால், செய்த அவை தீரும்,
அவை-உம்முடைய உரையால் வந்த பாவமும் உணர் நோய்களும்
தீச்செயலான குற்றமும்.
2. பொ-ரை: உயரிய வானத்தில் விளங்குகின்ற
வெள்ளிய மதியைச்
சூடிய சென்னியினளனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய
விகிர்தனும், இடுகாட்டில் பூதப் படையோடு ஆடுபவனும், இயங்கும்
விடையூர்தியினனும், விளங்கும் தலைமீது வண்டு பாடும் தேனடைந்த
மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய
திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப்பெறும் குற்றம்
முதலானவும், அவ்வுடலைப் பற்றிய பிணி நோய்களும் கெடும்.
கு-ரை: ஊன்-உடம்பு, ஆகுபெயர். ஒருங்கும்-கெடும்.
உயரும்வான்,
வான் அடைகின்ற மதி. வெள்ளைமதி என்க. ஆடி - பெயர்.
இயங்குவிடையான் - சஞ்சரிக்கும் இடபவாகனன்.
3. பொ-ரை:
திரிபுரத்தசுரரோடு போர் செய்து மும்மதில்களைக்
கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள் கூடியமைத்த தேரில்
நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால்
தொழுதால், ஊரின் கண் நின்று வாழ்ந்த உயிர் கவரும்
|