பக்கம் எண் :

908

போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
     புகழ்வானு ளோர்கள் புணரும்
தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த
     திருநாரை யூர்கை தொழவே.          3
2402.







தீயுறு வாயவாக்கை யதுபற்றி வாழும்
     வினைசெற்ற வுற்ற வுலகின்
தாயுற தன்மையாய தலைவன்றன் நாமம்
     நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
     விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
     திருநாரை யூர்கை தொழே்வ.         4


காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மெள்ளப் பழித்துரைக்கும்
வார்த்தைகளும் ஒழிவுறும்.

     கு-ரை: இத்திருப்பாட்டின் முற்பகுதியில் காலன் தீங்கு விரவிப்
பாரிடைவந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வரலாறு கூறப்பட்டது. அது
திருநாரையூர்ப் புராணத்தில் காணப்படவில்லை. ஞான்று- நாளன்று
என்பதன் மரூஉ. இது கல்வெட்டுக்களில் பயின்றுள்ளது. ‘நாளன்று போகி’
(புறம்124) என்புழிப்படும் பொருள் ஈண்டுக் கொள்ளலாகாது. நாளாகிய
அன்று, அந்நாள், பொழுது என்னும் பொருளில் ஆளப்படுகின்றது.

     ‘திருமுடியூர் ஆற்றுத் தளிப்பெருமானடிகளுடைய. . . . . . .
திருக்கற்றளியாக அமைப்பித்து, இவ்வாட்டை மகர ஞாயிற்றுச் சனிக்கிழமை
பெற்ற ரேவதி ஞான்று கும்பதாரை’ (Archaeological Survey of India,
Annual Report 1905-6, pp. 182-3.)

     4. பொ-ரை: இடுகாட்டில் பேய்களோடு உறவுகொண்டு
நடனமாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல் தேய்ந்த
பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை
வணங்கினால் தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும்.
தாயாய்த் தலையளி செய்யும் அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும்.