2403.
|
வசையப
ராதமாய வுவரோதம் நீங்குந்
தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி
யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே. 5 |
2404.
|
உறைவள
ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை யுலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
நிறைவாற்று நேசம் வளரும் |
கு-ரை:
செற்ற-நெருங்கிய, பின்னிய. செற்றவுலகு என்று இயைக்க.
செற்ற என்பதற்கு அழித்த என்று பொருள் கொள்ளின் தலைவன்
என்பதோடியையும.் உலகின்தாய் தாயாய் முலையைத் தருவானே
(திருவாசகம் 50-5) (தி.2 ப.24 பா.8). குறிப்புரை காண்க. நடமாடி- பெயர்.
தேய்பிறை என்றது இயல்படை. சிவபெருமான் திருமுடியில் உள்ள
பிறைக்குத் தேய்தலும் வளர்தலும் இல்லை. தொழமருவும் என்க.
5.
பொ-ரை: மேலான வீட்டுலகில் இருப்பவர். எல்லார்க்கும்
முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும் முப்புரிநூலர்.
விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி
சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான்
எழுந்தருளிய திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள்
இடையூறுகள் நீங்கும். தவம் வரும்.
கு-ரை:
உவரோதம்-உபரோதம். இடையூறு. உவர் ஓதம் என்னும்
தொடர் உப்பு நீர்க்கடல் என்னும் பொருளதுமாம். அப்பொருள் கொள்ளின்
வசை ஆம் அபராதமாய உவரோதம் என்பதற்குக் கடல் அளவு குற்றமாம்.
6.
பொ-ரை: வேதம் வளரும் திருநாவினன் யானைத் தோலை
மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன்.
|