|
மறைவளர்
நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன்
அரவார்த்த வண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற
திருநாரை யூர்கை தொழவே.
6 |
2405.
|
தனம்வரு
நன்மையாகுந் தகுதிக் குழந்து
வருதிக்
குழன்ற வுடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செந்று
நினைவொன்று
சிந்தை பெருகும்
முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச்
சரமுன்
றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
திருநாரை
யூர்கை தொழவே. 7
|
தலைமைத் தன்மை உடையோன்
அப்பெருமான் திருவடிகளையே
திறைப்பொருளாக வளர்கின்ற தேவர்கள் தம் தொண்டால் அவன்
அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக நிற்கும்
உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும்.
குறைகளைப் போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும். நேசம் வளரும்.
கு-ரை:
வேதம் வளரும் திருநாவினன், யானை உரி போர்த்த
திருமேனியன், பாம்பைக் கச்சாகக்கட்டிய தலைவன் ஆகிய சிவபெருமான்
திருவடிகளையே தேவர்கள் திருத்தொண்டின் எய்தும் திருவருளால்
விரும்பநின்ற திருநாரையூர். திறைவளர்தேவர்-சிவபிரானுக்குத் திறையாக
வளர்கின்ற தேவர்கள். திறையாதல்-தம்மை அர்ப்பணம் செய்தல்.
அடைக்கலமும் ஆம். தெறுதல் - தெறை - திறை. “ஒன்னார்த்தெறு
பொருள்-பகைவரைத் திறையாகக்கொள்ளும் பொருள். தெறுதலான் வரும்
பொருள் எனவிரியும்” (குறள் 756. உரை).
7.
பொ-ரை: முன்னொரு காலத்தில் முப்புரங்கள் அழியுமாறு
சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய
செல்வத் திருநாரையூரைக் கைகளால் தொழுதால் தனம் வரும்.
நன்மையாகும். பெருமை பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று
உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும் வஞ்சகங்களை
அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும்.
|