பக்கம் எண் :

911

2406.

உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற
     நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
     இழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம்
     மழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்
     திருநாரை யூர்கை தொழவே.         8

   
2407. வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
     பகைதீர்க்கு மேய வுடலில்
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
   கரவைக் கரந்து திகழும்


     கு-ரை: திருநாரையூரைத் தொழுதால் செல்வம் வரும். நலங்கள்
உளவாகும். மேன்மை பெறுதற்கு முயன்று திசையெல்லாம் சுழன்ற உடம்பில்
கூட்டமாக வளர்கின்ற ஐம்புலக் கள்வர் செய்கின்ற வஞ்சகங்களை அழித்து,
சிவபெருமான் திருவடிக்கே பதித்த சிந்தை வளரும்.

     8. பொ-ரை: அழிவில்லாத கடலாலும் அரிய மலைகளாலும்
சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட
கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய
திருநாரையூரைக் கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர்
கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர்
மணமலர்களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக.

     கு-ரை: திருநாரையூரைத் தொழ உடம்பு நீங்கும் காலத்தில்
உயிரைக் கொள்ளும் கூற்றுவன் மிக அஞ்சுவன். ஆதலால் நீர் மிகுதியாக
மணமலர்களைத் தூவி எப்பொழுதும் சிவ வழிபாடு செய்மின்.
அழிதலில்லாத கடல் நடுவே மலைகள் ஆழப்பெற்ற இலங்கைக்கு
வேந்தனாகிய இராவணனது வீரம் அழியவும் பத்துத் தலைகளும் இருபது
கைகளும் நசுங்கவும் ஒரு திருக்காற் பெருவிரலை ஊன்றி உயர்ந்த
சிவபெருமான் எழுந்தருளிய செல்வத்தை உடைய திரு நாரையூர்.

     9. பொ-ரை: சேற்றில் உயர்ந்து தோன்றும் தாமரை மலரில்
விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச் சீறி