|
சேறுயர்
புவின்மேய பெருமானும் மற்றைத்
திருமாலு நேட எரியாய்ச்
சீறிய செம்யைமாகுஞ் சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே. 9 |
2408.
|
மிடைபடு
துன்பமின்ப முளதாக்கு முள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண
மொலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும்
உரைமாயும் வண்ண மழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே. 10 |
எழுந்த சிவபிரான்
மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு
இறப்பற்ற தன்மை கிடைக்கும். வினையாகிய துக்கம், மிக்க பகை
இவற்றைத் தீர்க்கும். தெளிந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ
மறைந்து நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும்.
கு-ரை:
சேற்றில் தோன்றி உயர்ந்த தாமரைப்பூவில் மேவிய
பெரியோனாகிய பிரமனும் திருமாலும் தேடத் தீப்பிழம்பாகிக் கனன்ற
செம்மையாகும் சிவபெருமான் எழுந்தருளிய செல்வத்தை உடைய
திருநாரையூரைக் கைதொழுதால் பிறந்திறந்துழலும் துன்பவாழ்விற்கு
வேறாய் உயர்ந்த பேரின்ப வாழ்வாகிய சகச நிலை திகழும். வினையும்
அதனால் வரும் துக்கமும் மிக்க பகையைத்தீர்க்கும். பொருந்திய உடலில்
தெளிந்த சிந்தையும் உண்மையும் தெளியச் செய்யநின்ற தனது மறைவை
ஒழித்து விளங்கும். தன்மை-சகசம், சுபாவம், இயல்பு. வினையாகிய
துக்கம்மிக்க பகை. வினையைப் பகை என்றல் திருமுறையில்
பயிலக்காணலாம். கரப்பர்கரிய மனக்கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம்
நினையகிற்பார் பாவம்துரப்பர். (தி.6 ப.17 பா.5)
10.
பொ-ரை: சூலப்படையைக் கையில் ஏந்திப் பலியேற்கும்
தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை
உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன
மாயுமாறு செய்து காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக்
கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம் உளதாகும். உள்ளம் ஒளியாக்கும.்
ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள்.
|