பக்கம் எண் :

914

 87. திருநறையூர்ச்சித்தீச்சரம்

பதிக வரலாறு:

     திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அரதைப் பெரும்பாழி, சேறை,
நாலூர், குடவாயில் என்பவற்றை வணங்கித் திருநறையூரைச் சார்ந்து, சீ
த்தீச்சரத்தைப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

                பண்: பியந்தைக்காந்தாரம்

ப.தொ.எண்: 223   பதிக எண்: 87

                    திருச்சிற்றம்பலம்

2410.







நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
     யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
     யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
     நல்குண்டு பண்டு சுடலை
நாரியொர் பாகமாக நடமாட வல்ல
     நறையூரின் நம்பனவனே.          1


     1. பொ-ரை: ஊர்கள் தோறும் சென்று, பிச்சையேற்று உலகங்கள்
போற்ற நல்குவதை உண்டு. முற்காலத்தே சுடலையில் மாதொருபாகனாக
நடனமாடவல்ல, நறையூரில் விளங்கும் நம்பனாகிய சிவபெருமான்,
நுண்ணியன். பேருருவினன். தன்னொரு பாகத்தை அளித்த திருமால்முன்
சோதிப்பிழம்பு ஆனவன். நீர், காற்று, முதலான ஐம்பூத வடிவினன்.

     கு-ரை: நேரியன்-நுண்ணியன், தோன்றுபவன். (சித்தி. 280.) முன்
ஆய ஒளியான்-அநாதியாகிய சிவப்பிரகாசன். திருமால்முன் சோதிப்பிழம்பு
ஆனவன் எனலும் ஆம்.

     அல்லன்-நேரியனல்லாத பரியன். நீரியல். . . . நிமலன் நீர், காற்று,
விண், தீ, ஆகிய விமலன், நல் குண்டு-நல்க உண்டு. அகரம் (தொகுத்தல்
விகாரம்).