பக்கம் எண் :

915

2411.








இடமயி லன்னசாயன் மடமங்கை தன்கை
     யெதிர்நாணி பூண வரையில்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
     வமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை யெனநின்றுதொண்டர்
     மனநின்ற மைந்தன் மருவும்
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை
     நறையூரின் நம்பனவனே.          2
2412.







சூடக முன்கைமங்கை யொருபாக மாக
     வருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
     படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு
     குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
     நறையூரின் நம்ப னவனே.         3


     2. பொ-ரை: பொருந்திய மயில்கள் நடனம் ஆடி அகவவும்,
புகழ் நீடிய குயில்கள் கூவவும், விளங்கும் சோலை சூழ்ந்த நறையூரில்
விளங்கும் நம்பனாகிய அப்பெருமான், இடப்பாகத்தே மயிலன்ன
சாயலுடன் விளங்கும் மலைமங்கையோடு தன் கையில் உள்ள மலைவில்லில்
அரவு நாணைப் பூட்டிக் கடிதானகூரிய அம்பினைக் கோத்து,
மூவெயில்களைச் செந்று மகிழ்ந்து தேவர்கட்கு வாழ்வளித்த தலைவன்.
இளைய மயிலூர்தியைக் கொண்ட முருகனின் தந்தை என்று தொண்டர்
எதிர்நின்று போற்ற அவர்கள் மனத்திலே எழுந்தருளும் மைந்தன் ஆவான்.

     கு-ரை: நாணி-வில்லின்நாண்வரை-மேருவாகிய வில். கடும் அயில்
அம்பு-கடிய கூரிய கணை. மயிலூர்தி-முருகப்பெருமான். நின்று
நின்றமைந்தன் எனக் கூட்டுக.

     3. பொ-ரை: இளம் பெண்கள் நாட்டியம் ஆடிப்பாடிப்
போற்றும் நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய அப்பெருமான் வளையல்
அணிந்தமுன் கைகளை உடைய மலைமங்கை ஒரு பாகமாக விளங்க
அருள்புரிய வருபவன். பெரிய வீடுகளை நோக்கிச் சென்று