பக்கம் எண் :

916

2413.







சாயனன் மாதொர்பாகன் விதியாய சோதி
     கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த வருளாய செல்வன்
     இருளாய கண்ட னவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
     மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
     நறையூரின் நம்ப னவனே.           4
2414.



நெதிபடு மெய்யெமைய னிறைசோலை சுற்றி
     நிகழம்ப லத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல வமரர்க் கொருத்தன்
     எமர்சுற்ற மாய இறைவன்


அவர்கள் இடும் பிச்சையை ஏற்று, மிக்க ஈடுபாடு உடையவன் என்று
அடியவர் பரவி ஏத்த, இரு காதுகளிலும் தோடும் குழையும் அணிந்து
யானையின் தோலைப் போர்த்துள்ளவன்.

     கு-ரை: சூடகம்-வளையல். ஈடு அகம் ஆன-பெரிய வீடுகள்
ஆனவற்றைநோக்கி. தோடும் குழையும் இருவேறு திருச்செவியிலும்
அணிந்தது முன்னும் குறிக்கப்பட்டது. (தி.2 ப.84 பா.5).

     4. பொ-ரை: தாங்கள் விரும்பிய மலையின்கண் இருந்து தவம்
முயலும் சித்தர்கள் இறங்கி வந்து வழிபடுகின்ற, சித்தர்கட்கு ஈசுவரன்
என்று மறையவரால் போற்றிப் பேணும் நறையூர்ச் சித்தீச்சரத்து
இறைவனாகிய அவன், அழகிய மலைமாதினை ஒரு பாகமாகக்
கொண்டவன். எல்லோர்க்கும் ஊழை வரையறுக்கும் சோதி. சிவகதியாக
நிற்கும் கடவுள். என் மனத்திடை வந்து அருள் புரியும் செல்வன். இருண்ட
கண்டத்தினன். தாயெனத் தலையளி செய்யும் தலைவன்.

     கு-ரை: கதியாகநின்ற கடவுள்-சிவகதியாக நிற்கும் பரமேச்சுவரன்.
அவனித்தாய் ‘தாயவன்காண் உலகிற்கு’ (தி.6 ப.64 பா.4). மலையின்கண்
வந்து தொழுவார் நாயகன்- மலையினிருந்து வந்து வழிபடுகின்ற சித்தர்க்கு
ஈசுவரன் என்று மறையோர்கள் இறைஞ்சிப் பேணும் நறையூர் என்க. பா.
‘சித்தர் பேண.’

     5. பொ-ரை: வளைமீன்கள் நதி வழியாக நீந்தி வந்து வயல்களிற்
பாயும் நறையூரில் எழுந்தருளிய இறைவன், சேமநிதியாகக்