பக்கம் எண் :

917

மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
     விடையேறி யில்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
     நறையூரின் நம்ப னவனே.                5
2415.







கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
     மலர்துன்று செஞ் சடையினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
     பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
     பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
     நறையூரின் நம்ப னவனே.                6


கருதப்படும் மெய்ப்பொருள் எமக்குத் தலைவன் நினைறந்த சோலைகள்
சூழ்ந்த அம்பலத்தில் அதிர்பட ஆடுபவன் அமரர்க்குத் தலைவன்.
அடியவர்க்குச் சுற்றமாய் விளங்குபவன். பிறை பொருந்திய சடை தாழ்ந்து
தொங்க விடைஏறி வந்து வீடுகள் தோறும் பலி ஏற்பவன்.

     கு-ரை: நெதிபடுமெய்-நிதியாகப்படுகின்ற மெய்(ப்பொருள்).
அமரர்க்கு ஒருத்தன்-தேவாதி தேவர்க்கெல்லாம் தலைவன். அமரரால்
அமரப்படுவான்-(தி.7 பா.384.) எமர்சுற்றம் ஆய இறைவன்-எம்மவராகிய
அடியார்களுக்கு உறவாய கடவுள். இல்-வீடுதோறும்.

     6. பொ-ரை: அருள் பெறத் தன்னை நண்ணிய தொண்டர்கள் மலர்
தூவி ஏத்த நறையூரில் விளங்கும் இறைவன். கங்கை தங்கிய முடி மீது
வன்னி, கொன்றைமலர் முதலின பொருந்திய சடையினை உடையவன்.
வணங்குதற்கு முன்னரே அவர்கள் விரும்பும் வடிவங்கள் பலவாகத்
தோன்றி அருள்புரிபவன். தன்னை அணுகிய வேதங்களின் ஓசை, அகன்ற
ஆறு அங்கங்களின் பொருளாக விளங்கும் கருணையாளன்.

     கு-ரை: கணிகை-கங்கை. கணிகையொர் சென்னி-தியானிப் போர்;
பிரமந்திரம் எனல் பொருந்தாது. சென்னியில் வன்னியும் கொன்றைமலரும்
துன்றிய செஞ்சடை உடையவன். பணிகையின் முன்-வணங்குதற்கு முன்னரே
பணிகின்ற கை என்ன வினைத்தொகையாகக் கொள்ளலும் பொருந்தும்.
அணுகிய வேத ஓசை-