2416.
|
ஒளிர்தரு
கின்றமேனி யுருவெங்கு மங்க
மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க வனலேந்தி யாடும்
விகிர்தன்
விடங்கொண் மிடறன்
துளிதரு சோலையாலை தொழின்மேவ வேத
மெழிலார வென்றி
யருளும்
நளிர்மதி சேருமாட மடவார்க ளாரு
நறையூரின் நம்ப
னவனே.
7 |
2417.
|
அடலெரு
தேறுகந்த வதிருங் கழற்கள்
ளெதிருஞ் சிலம்பொ
டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
முனிவுற் றிலங்கை
யரையன் |
தன்னை அடைய வேண்டும்
என்று தேடிக்கிட்டிய வேத முழக்கம். அகல்
அங்கம் ஆறின் பொருள்-விரிந்த ஆறங்கங்களின் பொருள்.
7. பொ-ரை: தேன் துளிக்கும் சோலைகளையும்,
கரும்பினைப்
பிழிந்து வெல்லம் ஆக்கும் தொழிலையும் வேதமுழக்கங்களின்
எழுச்சியையும், வெற்றி வழங்கும் செல்வவளம் உடைய வானளாவிய,
மடவார்கள் வாழும் மாடவீடுகளையும் உடைய நறையூரில் எழுந்தருளிய
இறைவன் ஒளிதரும் தன்திருமேனியிலுள்ள அங்கங்கள் எங்கும் அரவுகள்
ஆட, கையில் விளங்கும் அனலை ஏந்தி ஆடும் விகிர்தன். விடம்
பொருந்திய கண்டத்தினன்.
கு-ரை: மேனி-நிறம். துளிதரல்-தேன்துளித்தல்.
வேதம் எழில்ஆர-
வேத முழக்கத்தின் எழுச்சி நிறைய. மதிசேரும் மாடம்:- வண்கொண்டல்
விட்டு மதிமுட்டுவன மாடம் (கம்பர்).
8. பொ-ரை: இலங்கை மன்னனாகிய இராவணனின்
உடல்
தோள் பத்துத் தலைகள் ஆகியவற்றை நெரித்துப் பின் அவனது
இசையைக் கேட்டு இரங்கி அவன் துன்பங்களைத் தவிர்த்து ஒப்பற்ற
வாளைத் தந்து கருணை காட்டியவனாய் நம்மை ஆளுதற்பொருட்டு
நறையூரில் எழுந்தருளிய இறைவன் வலிய எருதினை உகந்தவன்.
அதிரும் கழல்களோடு ஒருபாதியில் சிலம்பு ஒலிக்க வருபவன்.
|