|
உடலொடு
தோளனைத்து முடிபத் திறுத்தும்
இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
நறையூரின் நம்ப னவனே. 8 |
2418.
|
குலமலர்
மேவினானும் மிகுமாய னாலும்
எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல வெய்தொணாமை யெரியா யுயர்ந்த
பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
நறையூரின் நம்ப னவனே. 9 |
கடலிடையே தோன்றிய
நஞ்சினை உண்டு கனிவு பொருந்தக் கண்டத்தில்
நிறுத்தியோன்.
கு-ரை:
கழல்கள் எனற்பாலது கழற்கள் எனத் திரிந்தது. அரையன்-
அரசன், இராவணன். உடல் தோள் முடி அனைத்தும் இறுத்தும் கேட்டு,
இரங்கி, தீர்த்து (வாள்) நல்கி என்க. நல்கி ஆளவல்லநம்பன்.
9.
பொ-ரை: சிலபல தொண்டர்கள் நின்று பெருமைகள் பேசிப்
பரவக் கரியமேகங்கள் விளங்கும் பொழிலின் நல்ல மலர்கள் சிந்துதலால்
மணம் வீசும் வீதிகளை உடைய நறையூரில் எழுந்தருளிய நம்பனாகிய
இறைவன் மலர்களிற் சிறந்த தாமரைமலர் மேல் விளங்கும் பிரமனும்
புகழ்மிக்க திருமாலும், எதிர்கூடித் தேடியும் அவர்கள் நினைப்பில்
உற்றிலாத பல சிறப்பினனாய் அவர்கள் காணமுடியாத படி, தீயாய் ஓங்கிய
பெரியோன், விளங்கும் சடைமுடியை உடையவன்.
கு-ரை:
மேவினான்; பிரமன். மிகுமாயன்-மாயம் மிக்கவன். நேடி-
தேடி. நினைவுற்றில பல-நினைப்பில் உற்றில்லாதவன பலவாய். பெருமைகள்-பொருள்சேர்புகழ்கள்.
பெருமைக்கள் என்பதில் கவ்வொற்று
இசைப்பொருட்டு விரித்தலாயிற்று. அருமை-அரிய மேகம். வரும்மை,
அருமை எனலுமாம். பொழில் இனிய நல்ல மலர்களைச் சிந்த, வாசமணம்.
ஒருபொருளிரு சொல்.
|