பக்கம் எண் :

920

2419.







துவருறுகின்ற ஆடை யுடல்போர்த் துழன்ற
     அவர்தாமும் அல்ல சமணும்
கவருறு சிந்தையாள ருரைநீத் துகந்த
     பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
     முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயி லொளிபொன்செய் மாட
     நறையூரின் நம்ப னவனே.          10
2420.



கான லுலாவி ஓதம் எதிர்மல்கு காழி
     மிகுபந்தன் முந்தி யுணர
ஞான முலாவுசிந்தை அடிவைத் துகந்த
     நறையூரின் நம் னவனை


     10. பொ-ரை: தவம் நிறைந்த பத்தர்கள், சித்தர்கள், மறைவல்லோர்
விரும்பி வழிபடவும், மாதர்கள் முறையாகப் பாடி அடையவும், நவமணிகள்
செறிந்த கோயிலையும் ஒளிதரும் பொன்னால் இயன்ற மாடவீடுகளையும்
கொண்டுள்ள நறையூரில் விளங்கும் இறைவன், துவர் ஏற்றிய ஆடையை
உடலில் போர்த்துத் திரியும் தேரரும் அவரல்லாத சமணர்களும் ஆகிய
மாறுபட்ட மனம் உடையோர் உரைகளைக் கடந்து நிற்கும் பெருமான்
ஆவன். அவன் விளங்கும் சடைமுடி உடையோன்.

     கு-ரை: துவர் உறுகின்ற ஆடை-துவர் (காவி) ஊட்டிய துணி அல்ல-
(தேரர்) அல்லாத, கவர் உறு சிந்தையாளர்-பல தலையாய் உற்ற மனம்
உடையவர். பலதலை-ஐயம். தவம்மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண-
தவத்தின் மிகுந்த அன்பரும் சித்துவல்லாரும் வேதியரும், விரும்பிவழிபட.
(பா.4) இல் ‘மலையின் கண் வந்து தொழுவார்’ என்றது இதிற்குறித்த
சித்தரையே.

     11. பொ-ரை: ஓதநீர் கடற்கரைச் சோலைகளைக் கடந்து வந்து
நிறையும் காழிப்பதியில் தோன்றிய புகழ் மிகு ஞானசம்பந்தன் இளமையில்
உணரும் வண்ணம் ஞானம் உலாவுகின்ற மனத்தில் தன் திருவடிகளைப்
பதிய வைத்து உகந்த நறையூரில் விளங்கும் இறைவனை, குற்றமற்றவகையில்
இசையால் உரைத்த தமிழ்மாலையாகிய இப்பத்துப் பாடல்களையும் உணர
வல்லவர் நிலவுலகம் நின்று வழிபடுமாறு வானம் நிலாவ வல்லவர் ஆவர்.