பக்கம் எண் :

921

 

ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
     தமிழ்மாலை பத்து நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
     வழிபாடு செய்யு மிகவே.            11

                     
                      திருச்சிற்றம்பலம்


     கு-ரை: ஞானம் உலாவு சிந்தை - திருப்பெருகு சிவஞானம்
உலாவுகின்ற திருவுள்ளத்தில் சிந்திக்கும் வண்ணம.்

         திருஞானசம்பந்தர் புராணம்

நிகரிலா மேருவரை அணுவாக நீண்டானை
     நுகர்கின்ற தொண்டர்தமக் கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள் தமைவினவித் தமிழ்விரகர்
     பகர்கின்ற அருமறையின் பொருள்விரியப் பாடினார்.
பாடும்அர தைப்பெரும் பாழியே முதலாகச்
     சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
     நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.
அங்கண்இனி தமருநாள் அடல்வெள்ளே னத்துருவாய்ச்
     செங்கண்நெடு மால்பணியுஞ் சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங் கழல்வணங்கிக் காதலினால்
     பொங்கும்இசைத் திருப்பதிகம் முன்நின்று போற்றிசைத்தார்.

                                      -சேக்கிழார்.