4. திரு அரிசிற்கரைப்புத்தூர்
இத்தலம் சோழநாட்டுக்
காவிரித் தென்கரைத்தலம். கும்பகோணம் -
நாச்சியார் கோயில் பேருந்தில் சென்றால் இவ்வூரை அடையலாம்.
இத்தலம்
அழகாபுத்தூர் என வழங்குகிறது. சுவாமி; படிக்காசு
வைத்தபரமர். தேவி: சிவாம்பிகை, சௌந்தர நாயகி அழகம்மை.
இந்தவூர்
அழகார் புத்தூர் திருப்புத்தூர் என்றும் வழங்குகின்றது.
அரிசில் நதி ஓடுகிறது. கோச் செங்கட்சோழன் திருப்பணி.
சொர்ணபுரீஸ்வர
சுவாமி மேற்குப் பார்த்த சந்நிதி, சந்நிதித் தெரு,
அழகானது. தென்னை மரங்களின் வரிசைகொண்டது.
கல்வெட்டு:
ஏழு
கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. அவை எல்லாம் சோழர்
காலத்தவை.
1. இராஜராஜன்
7-ஆம் ஆண்டில் திருப்புத்தூர் உடையார்
பரமசுவாமிக்கு 1300 குழி நிலம் வழிபாட்டிற்காக விட்டான். அப்போது
மூலகிருகம் கல்லால் படைக்கப்பெற்றது. ஊர்ப்பெயர் திருநாரையூர் நாட்டுப்
பரமதேயமான பரதாயகுடி என்று கண்டிருக்கிறது.
2. அதே
அரசனால் தனது 22ஆம் ஆண்டில் ஒரு விளக்குக்காக 3
மா. நிலம் கொடுக்கப்பட்டது.
3. அதே
அரசனால் தனது 28ஆம் ஆண்டில் விளக்குத் தானம்
செய்யப்பட்டது.
4. இராஜராஜன்
காலத்தில் மேல்வேம்பாநாட்டு நல்லார் குடியினன்
ஒருவன் சூரியதேவன் கோயில் கட்டினான் என்றும், அதற்கு வழிபாடு
நடத்த முப்பது காசு தந்து அதற்கு 6 மா.நிலமும் விடப்பெற்றது என்றும்
தெரிவிக்கிறது.
5. முதற்குலோத்துங்கன்
காலத்தில் வழிபாட்டிற்காக நிலம் தரப்பட்டது,
|