பக்கம் எண் :

93

     6. விக்கிரமசோழன் (கி.பி.1125) காலத்தில் திருப்புத்தூர் அழகிய
தேவருக்கு ஒருவிளக்குக்காகப் பணம் தரப்பெற்றது.

     7. கோச்செங்கட்சோழன்: ஒரு கல்வெட்டில் குலோத்துங்கச்
சோழவளநாட்டு அழகார் திருப்புத்தூர் என்று ஊர்ப்பெயர்
குறிக்கப்பெற்றுள்ளது.

     5. திரு அழுந்தூர் (தேரழுந்தூர்)

     சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். நாகை மாவட்டம்.
மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய
ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை-
கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர்
தொடர்வண்டி நிலயத்தில் இறங்கி தெற்கே 3 கி. மீ சென்றால் ஊரை
அடையலாம். இது தென்கரைத் தலங்களுள் முப்பத்தெட்டாவது ஆகும்.

     அகத்திய முனிவர் கீழே இறைவரைப் பூசித்திருந்ததை அறியாது
ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் ஆகாயத்தில் செலுத்திய தேர் செல்லாது
அழுந்தியதால் இப்பெயர் பெற்றது என்பர்.

     இது இக்காலம் தேரழுந்தூர் என்று வழங்கப்பெறுகின்ற
பெயருக்கேற்றபடி இவ்வரலாறு தோற்றப்பெற்றது போலும், கம்பர் பிறந்த
கம்பன் மேடு உள்ள இடம்.

     இறைவரின் திருப்பெயர் வேதபுரீசுவரர். இறைவியாரின் திருப்பெயர்
சௌந்தரியாம்பிகை.

     வேததீர்த்தம். இது சந்நிதிக்குத் தென்பால் இருக்கின்றது.

     வேதங்கள், தேவர்கள், திக்குப்பாலகர்கள், முனிவர்கள் இவர்கள்
பூசித்துப் பேறு எய்தினர்.

     இது திருஞானசம்பந்தருடைய ஒரேபதிகத்தைப் பெற்றது. இக்கோயில்
“மாமடம்” எனப்படும் சிறப்பு இவ்வூர்த் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     இவ்வூர் அழுந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்