பக்கம் எண் :

923

2422.
பருவத்தில் வந்து பயனுற்ற பண்பன்
     அயனைப் படைத்த பரமன்
அரவத் தொடங்க மவைகட்டி யெங்கு
     மரவிக்க நின்ற வரனூர்
உருவத்தின் மிக்க வொளிர்சங்கொ டிப்பி
     யவையோத மோத வெருவித்
தெருவத்தில் வந்து செழுமுத் தலைக்கொள்
     திருமுல்லை வாயி லிதுவே.           2
   
2423. வாராத நாடன் வருவார்தம் வில்லின்
     உருமெல்கி நாளு முருகில்
ஆராத வின்ப னகலாத அன்பன்
     அருண்மேவி நின்ற வரனூர்
பேராத சோதி பிரியாத மார்பின்
     அலர்மேவு பேதை பிரியாள்
தீராத காத னெதிநேர நீடு
    திருமுல்லை வாயி யிதுவே.            3


     2. பொ-ரை: பக்குவம் வந்த காலத்தில் வந்து பேரின்பப் பயன்
அருளவல்ல பண்பினனும், அயனைப்படைத்த பரமனும், பாம்பினை
உடல் முழுதும் கட்டிக் கொண்டு எல்லோராலும் போற்றிப் புகழப்
படுவோனுமாகிய அரனது ஊர், உருவத்தால் பெரிய சங்குகளும்
சிப்பிகளும் ஓத நீர் மோதுவதைக் கண்டுவெருவித் தெருவில் வந்து
செழுமையான முத்துக்களைப்பல இடங்களிலும் ஈனும் திருமுல்லை
வாயிலாகிய இத்தலமாகும்.

     கு-ரை: பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன் என்பது இருவினை
யொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப் பெற்று, குருவருளால்
சிவஞானம் வளரலுற்று, பழமலம் பற்றறுத்து, சிற்றறிவு தீர்ந்து, திருவடி
அடையும் பருவத்தில் எழுந்தருளி வந்து, பயனாகப் பொருந்திய
எண்குணத்தன். அரவிக்க-ஒலிக்க. தெருவம்-தெரு. முத்து+அலை+கொள்
எனப்பிரிக்க. அலை-அலைதல். சங்கும் இப்பியும் முத்துக்களை ஈன்ற
குறிப்புணர்த்தப்பட்டது.

     3. பொ-ரை: மீண்டும் வாராத பேரின்ப நாடுடையவன், உலகிற்
பிறந்தோர் வானவில் போன்று விரைவில் தோன்றி மறையும்.