2424.
|
ஒன்றொன்றொ
டொன்று மொருநான்கொ டைந்து
மிருமூன்றொ டேழு முடனாய்
அன்றின்றொ டென்று மறிவான வர்க்கும்
அறியாமை நின்ற
வரனூர்
குன்றொன்றொ டொன்று குலையொன்றொ டொன்று
கொடியொன்றொ
டொன்று குழுமிச்
சென்றொன்றொ டொன்று செறிவா னிறைந்த
திருமுல்லை வாயி
லிதுவே.
4
|
இவ்வுடல் மெலியுமாறு
உருகி வழிபடில் ஆராத இன்பன் அருள்பவன்
அகலாத அன்புடையவன் அத்தகைய அரன் அருள் செய்ய
எழுந்தருளியுள்ள ஊர், நீங்காத ஒளியுடைய திருமால் மார்பை விடுத்துப்
பிரியாத திருமகளின் அன்புடன் செல்வம் தழைத்தோங்கும் பெருமை
மிக்க திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
கு-ரை:
வாராத நாடன்-மீண்டு வாராத பேரின்ப நாடுடையவன்
வில்லின் உரு-வானவில்லைப்போலத் தோன்றி விரைந்து மறையும் உடம்,
வாங்குசிலைபுரையும் உடல் நால்வர் நான் மணிமாலை வில்லைப்போலக்
கூனிக் கெடும் உடம்பெனலுமாம். நாளும் உருகில் ஆராத இன்பன்-
நாள்தோறும் பக்தியால் உருகித் தற்போதம் அற்றுச் சிவபோதம் உற்றால்,
அமையாத பேரின்பமாக விளங்குபவன். உள்ளம் உருகில் உடனாவார்
(தி.2 ப.111 பா.3). கௌத்துவ மணி நீங்காத திருமால் மார்பின்கண்
விற்றிருக்கும் திருமகள். மலர்மகள் பிரியாது, நீங்காத காதலுடன் செல்வம்
தோன்ற நீடுகின்ற திருமுல்லைவாயில் என்னும் பொருளும் உரியதாகும்.
4.
பொ-ரை: ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கு.
புருடதத்துவம்
இருபத்தைந்தாவது தத்துவம். இவ்விருபத்தைந்து தத்துவங்கட்கும் வேறாய்
நிற்பவன் இறைவன். இதனை அறியாதார் இருபத்தைந்தாவதாய் உள்ள
உயிரையே பதி என மயங்குவர். இவ்வாறு தத்துவ ஆராய்ச்சியாளர்கள்
அறியாது தடுமாறுகின்ற நிலையில் விளங்கும் அரனது ஊர், குன்றுகள்
ஒன்றோடு ஒன்று இணைவன போலும் மாடவீடுகளும், குலைகளும்
கொடிகளும் ஒன்றோடு ஒன்று குழுமிச் செறிவால் நிறைந்துள்ள
திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.
கு-ரை:
ஒன்று. . . . ஏழும் உடனாய்-இருபத்தைந்தும் உடனாகி.
தத்துவம் இருபத்தைந்தும் இவ்வாறு (1+1+1+4+5+6+7) தொகுத்து
|