2425.
|
கொம்பன்ன
மின்னி னிடையாளொர் கூறன்
விடைநாளு மேறு குழகன்
நம்பன்னெ மன்பன் மறைநாவன் வானின்
மதியேறு சென்னி யரனூர்
அம்பன்ன வொண்க ணவரா டரங்கின்
அணிகோ புரங்க ளழகார்
செம்பொன்ன செவ்வி தருமாட நீடு
திருமுல்லை வாயி லிதுவே. 5 |
உரைக்கப்பட்டன.
1. மூலப்பகுதி (குணதத்துவ காரணம்) 2. புத்தி 3
அகங்காரம் 4. மனம் 5.செவி 6. மெய் (துவக்கு) 7. கண் (நோக்கு)
8. வாய், (நாக்கு) 9. மூக்கு? 10. வாக்கு 11, பாதம் 12, பரணி 13. பாயு
14. உபத்தம் 15. சத்தம் 16. பரிசம் 17. உருவம் 18.இரதம் 19. கந்தம்
20 ஆகாயம்,21 வாயு 22. தேயு 23. அப்பு 24. பிருதிவி என்னும்
இருபத்துநான்கும் ஆன்மதத்துவங்களாகும்.
அவற்றுள், பிருதிவியை
முதலாகக்கொண்டு எண்ணின்,
எண்ணப்பட்ட இருபத்து நான்கின் வேறாய் எண்ணுகின்ற கர்த்தா
ஒன்று உண்டு. அதுவே ஆன்மா. அவ்வான்மாவே கடவுள் என மயங்கி,
அம்மயக்கத்தைத் தெளிவெனக் கொண்டவர்க்கு பரமான்மா வேறொன்று
உண்டு எனப் புலப்படாது. அவர், ஆன்மாக்களின் வேறாய், அவற்றிற்கு
உயிராய், உடனாய் இருக்கின்ற மெய்ப்பொருள் வேறு; இருபத்துநான்கு
தத்துவங்களையும் கொண்டு நிற்கும் ஆன்மாக்கள் வேறு; அவ்வுண்மையை
யறியாதார் பசுவைப் பதியாக் கொள்ளும் மயக்கம் மயக்கமே; தெளிவன்று;
அது பாதகம் என்று உண்மையுணர்த்துவது சமய குரவர்க்குக் கடனாதலின்,
இத்திருப்பாட்டின் முன்னீரடியினும் தமது கடனாற்றினார் நமது சமயத்தின்
ஆசிரியர். புருடதத்துவம் இருபத்தைந்தாவது. அதையே முடிவான பொருள்
எனக்கொள்ளும் சமயமும் உண்டு. குறள். 27. உரை பார்க்க.
சிவதருமோத்தரத்துள், 10ஆவது சிவஞானயோகவியலின் 32-ஆவது
செய்யுளுரைக்கீழ் பௌராணிகர் மதத் தின் படி கூறியுள்ளதும் அதன்
உரையில், ஐயஞ்சின் அப்புறத்தானும் ஆரூரமர்ந்த அம்மானே.
(தி.4 ப4 பா.10) என்று மேற்கோள் காட்டியதும் உணர்க.
5.
பொ-ரை: பூங்கொம்பு போன்றவளும் மின்னல் போலும்
இடையினளும் ஆகிய உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவன்.
நாள்தோறும் விடைமீது ஏறிவரும் இளையோன். நம்
|