பக்கம் எண் :

926

2426.







ஊனேறு வேலி னுருவேறு கண்ணி
     யொளியேறு கொண்ட வொருவன்
ஆனேற தேறி யழகேறு நீறன்
     அரவேறு பூணு மரனூர்
மானேறு கொல்லை மயிலேறி வந்து
     குயிலேறு சோலை மருவித்
தேனேறு மாவின் வளமேறி யாடு
     திருமுல்லை வாயி லிதுவே.          6


மேல் அன்புடையோன். மறையோதும் நாவினன். வானில் செல்லும் மதி
பொருந்திய சென்னியை உடைய அவ்வரனது ஊர், அம்பு போன்ற ஒளி
பொருந்திய கண்ணினை உடைய குலமகளிர், ஆடும் அரங்குகளும்,
அழகிய கோபுரங்களும் உடையதாய்ச் செம் பொன்னின் அழகைத்தரும்
மாடவீடுகள் கொண்ட திருமுல்லை வாயிலாகிய இத் தலமேயாகும்.

     கு-ரை: பூங்கொம்பு உமாதேவியார்க்கும் மின் இடுப்பிற்கும்
கொள்ளலாம். குழகன்-இளைஞன்; அழகன் கணவர்-கண்ணுடைய மகளிர்.
பொன்ன-பொன்னினுடைய.

     6. பொ-ரை: ஊன் பொருந்திய வேல் போன்ற கண்ணினள் ஆகிய
உமையம்மையின் கருநிறஒளியைப் பெற்றவன். ஆனேற்றின் மிசை ஏறி,
அழகுதரும் திருநீற்றை அணிந்தவன். பாம்பினை அணிகலனாகப் பூண்டவன்.
அவ்வரனது ஊர், மான்கள் துள்ளி ஆடும் முல்லை நிலத்தையும், மயிலும்
குயிலும் வாழும் சோலைகளையும் தேனைப் பொருந்திய வண்டுகளைக்
கொண்ட வளத்தையும் உடைய திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.

     கு-ரை: கண்ணி;-உமாதேவியார். அழகு ஏறும் நீறன்-‘சுந்தரமாவது
நீறு’ ‘கவினைத்தருவது நீறு’ அழகு ஏறுதலால் ‘கண்திகைப்பிப்பது நீறு’
கொல்லையில் மானும், சோலையில் மயிலும் குயிலும் ஏறுதல் இயல்பு.

     மா-வண்டு. தேன்-மலர்கள். முல்லை மாவின் வளத்தில் ஏறியாடும்
என்றால் மா-மரத்தையும், மாவின்வளம் முல்லையில் ஏறியாடும் என்றால்
மா வண்டினையும் குறித்ததாக் கொள்க.