2427.
|
நெஞ்சார
நீடு நினைவாரை மூடு
வினைதேய நின்ற நிமலன்
அஞ்சாடு சென்னி அரவாடு கையன்
அனலாடு மேனி யரனூர்
மஞ்சாரு மாட மனைதோறும் ஐயம்
உளதென்று வைகி வரினுஞ்
செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்
திருமுல்லை வாயி லிதுவே.
7 |
|
|
2428. |
வரைவந் தெடுத்த வலிவா ளரக்கன்
முடிபத்து மிற்று நெரிய
உரைவந்த பொன்னி னுருவந்த மேனி
உமைபங்க னெங்க ளரனூர்
வரைவந்த சந்தொ டகிலுந்தி வந்து
மிளிர்கின்ற பொன்னி வடபால்
திரைவந்து வந்து செறிதேற லாடு
திருமுல்லை வாயி லிதுவே. 8
|
7.
பொ-ரை: மனம் பொருந்த நீடு நினையும் அடியவர்களின்
வினைகளைப் போக்கியருள்பவன். ஆனைந்தாடுபவன். அரவு ஆடும்
கையன். அனல்போன்றமேனியன் அவ் அவனது ஊர், மேகங்கள் தங்கும்
உயரிய மாடங்களைக் கொண்ட மனைகள் தோறும் பிச்சையேற்க
யார்வரினும் செந்நெற் சோறளித்து மகிழ்வோர் வாழும் திருமுல்லை
வாயிலாகிய இத்தலமேயாகும்.
கு-ரை:
நெஞ்சார நீடு நினைவாரை மூடுவினை-உள்ளத் தாமரையில்
சிவபெருமான் திருவடியே அன்றி மற்று எதையும் எண்ணாமல், இடைவிடாது
கருதிப்பணிகின்ற மெய்யடியரைச் சூழும் இருவினையும். தேய அவரைப்
பற்றாது முற்றும் தேய்ந்தொழிய. நின்ற நிமலன்-அவர் உள்ளத்தாமரையில்
நிலைத்தருளிய பரசிவன். ஈயப்படும் பொருளின் உயர்வு விளங்கச்
செஞ்சாலிநெல்லின் வளர்சேறு எனக் குறிக்கப்பட்டது.
8.
பொ-ரை: கயிலைமலையை வந்தெடுத்த வலிய வாளை உடைய
அரக்கனாகிய இராவணனின் முடிகள் பத்தையும் நெரியச் செய்தவனும்,
உரைத்துக்காணப் பெறும் பொன்போலும் மேனிய
|