பக்கம் எண் :

928

2429.







மேலோடி நீடு விளையாடல் மேவு
     விரிநூலன் வேத முதல்வன்
பாலாடு மேனி கரியானு முன்னி
     யவர்தேட நின்ற பரனூர்
காலாடு நீல மலர்துன்றி நின்ற
     கதிரேறு செந்நெல் வயலிற்
சேலோடு வாளை குதிகொள்ள மல்கு
     திருமுல்லை வாயி லிதுவே.          9
2430.



பனைமல்கு திண்கை மதமா வுரித்த
     பரமன்ன நம்பன் அடியே
நினைவன்ன சிந்தை யடையாத தேரர்
     அமண்மாய நின்ற வரனூர்


ளாகிய உமையம்மை பங்கனும் ஆகிய எங்கள் அரனது ஊர்,
மலையிலிருந்து சந்தனம் அகில் ஆகியவற்றை அடித்து வந்து விளங்கும்
பொன்னியாற்றின் திரைகள் வீசும் வடகரையில் செறிந்த தேன் அடைகள்
ஆடும் திருமுல்லை வாயிலாகிய இத்தலமேயாகும்.

     கு-ரை: உரைவந்த பொன்னின் உருவந்தமேனி உமை-
கட்டளைக்கல்லில் மாற்று உரைக்கப்பெற்ற சிறந்த பொன்னிறம்
பொருந்திய திருமேனியை உடைய உமாதேவியார். தேறல்-தெளிதேன்.

     9. பொ-ரை: திருமேனி நீண்டு ஓடிவிளையாடலைப்
பொருந்திய முப்புரிநூலை உடையவன். வேதமுதல்வன். பிரமனும் திருமாலும்
தேடிக்காணாது திகைக்குமாறு உயர்ந்து நின்றோன். அவனது ஊர், காற்றில்
அசையும் நீலமலர்கள் நிறைந்து நிற்பதாய், கதிர் மிகுந்த செந்நெல்
வயல்களில் சேலும் வாளையும் குதிகொள்ளும் திருமுல்லைவாயிலாகிய
இத்தலமேயாகும்.

     கு-ரை: ‘மேலோடி. . . நூலன்’:- திருமார்பில் அனிந்த முப்புரிநூல்
அவனது திருமேனியில் திருத்தோள்மேல் ஓடி நீடும் விளையாடுதல்
மேவுதலை உணர்த்திற்று. விரிநூலன் என்பது சிவபிரான் என்னும்
பொருட்டாய் நின்றதென்றும், அவன் விளையாடல் மேவியவன் என்றும்
கொள்ளலும் பொருந்தும்.

     10. பொ-ரை: பனைபோன்ற திண்ணிய துதிக்கையை உடைய
மதயானையை உரித்த பரமன். நம்பால் அன்புடையவன். தன்