|
வனமல்கு
கைதை வகுளங்க ளெங்கு
முகுளங்ளெங்கு நெரியச்
சினைமல்கு புன்னை திகழ்வாச நாறு
திருமுல்லை வாயி லிதுவே. 10 |
2431.
|
அணிகொண்ட
கோதை யவணன்று மேத்த
வருள்செய்த வெந்தை மருவார்
திணிகொண்ட மூன்று புரமெய்த வில்லி
திருமுல்லை வாயி லிதன்மேல்
தணிகொண்ட சிந்தை யவர்காழி ஞான
மிகுபந்தன் ஒண் தமிழ்களின்
அணிகொண்ட பத்து மிசைபாடு பத்தர்
அகல்வானம் ஆள்வர் மிகவே. 11
|
திருச்சிற்றம்பலம்
திருவடியை நினையாத
சமண தேரர் ஆகியோர் அழிந்தொழிய நிற்பவன்.
அப்பெருமானது ஊர், வனங்களில் தாழை மரங்கள், மகிழ மரங்கள்
ஆகியன எங்கும் நிறைந்த மொட்டுக்களைத்தரவும், அரும்புகளை உடைய
புன்னை மரங்களின் மணம் வீசவும் விளங்கும் திருமுல்லை வாயிலாகிய
இத்தலமேயாகும்.
கு-ரை:
பனை. . கை: - பனைக்கை மும்மதவேழம் பரமன் நம்
நம்பன். நம்பன் அடியே நினைவு அன்னசிந்தை-சிவபெருமான் திருவடியே
நினைக்கும் அத்தகைய சித்தத்தை. வகுளங்கள் - மகிழமரங்கள்.
முகுளங்கள்-மொட்டுக்கள்.
11.
பொ-ரை: அணிகொண்ட கோதை என்ற திருப்பெயருடைய
இத்தலத்து அம்பிகை மிகவும் ஏத்தி வழிபட அவளுக்கு அருள் செய்த
எந்தையாவர். பகைமை கொண்ட அசுரர்களின் வலிய முப்புரங்களை
எய்தழித்த வில்லை உடையவர். அப்பெருமான் எழுந்தருளிய திருமுல்லை
வாயிலாகிய இத்தலத்தின்மீது தணித்த சிந்தை உடையவனும் காழிப்பதியில்
தோன்றியவனுமாகிய ஞானம் மிக்க சம்பந்தன் பாடிய ஒண் தமிழ்ப்
பாடல்களின் மாலையாக அமைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும்
இசையோடு பாடும் பக்தர்கள் அகன்ற வானுலகை மிகவும் அரசாள்வர்.
|