திருஞானசம்பந்தர்
புராணம்
அருமையாற்
புறம்பு போந்து வணங்கிஅங் கமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச் செழுந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து ஞானசம் பந்தர் சார்ந்தார்.
வைகும்அந்
நாளிற் கீழ்பால் மயேந்திரப் பள்ளி வாசம்
செய்பொழிற் குருகா வூருந் திருமுல்லை வாயில் உள்ளிட்(டு)
எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச்சொல் மாலை.
-சேக்கிழார்.
|