பதிக வரலாறு:
137ஆவது பதிகத் தலைப்பைக் காண்க.
பண்:
பியந்தைக்காந்தாரம்
ப.தொ.எண்:
225 |
|
பதிக
எண்: 89 |
திருச்சிற்றம்பலம்
2432.
|
அறையும்
பூம்புன லோடும்
ஆடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற்
பெண்ணொரு பாக மமர்ந்தார்
மறையி னொல்லொலி யோவா
மந்திர வேள்வி யறாத
குறைவி லந்தணர் வாழுங்
கொச்சை வயமமர்ந் தாரே.
1 |
|
|
2433.
|
சுண்ணத்தர்
தோலொடு நூல்சேர்
மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கன லேந்திக்
கங்குனின் றாடுவர் கேடில்
|
1.
பொ-ரை: வேதம் ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி
நீங்காத மந்திரங்களோடு கூடிய வேள்விகள் நிகழ்வதும் குறைவற்ற
அந்தணர்கள் வாழ்வதுமாய கொச்சை வயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர்,
ஒலிக்கின்ற அழகிய கங்கையோடு ஆடும் பாம்பையும் அணிந்துள்ள
சடைமேல், பிறையையும் சூடியிருப்பவர். திருமேனியில் உமையம்மையை
ஒரு பாகமாகக் கொண்டவர்.
கு-ரை:
அறையும்-ஒலிக்கும் மறையின் ஒல்ஒலி-வேதங்களை
ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி. குறைவு இல் அந்தணர்-
வேதாத்தியயனத்திலும், வைதிகாசாரத்திலும், யாககிருத்தியங்களிலும்
குறைபாடில்லாத அழகும் குளிர்ச்சியும் உடையவர். வேதாந்ததத்தை
அணவுவார் அந்தணர் என்றார் நச்சினார்க்கினியர்.
2.
பொ-ரை: வேதங்களை உணர்ந்தவர்களும், நல்லவேள்விகளைத்
தவறாது செய்பவரும், மேம்பட்ட எரியோம்பும் தன்மையர்
|